தளபதி விஜய்-யை கதறவிட்ட பிரபல முன்னணி நடிகை!! இதை அவரே பேட்டியில் கூறியுள்ளார்.

0

thalapathy vijay cried:இளைய தளபதி விஜய்க்கு உலகம் முழுவதுமே ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அவரின் நடிப்பு, நடனம், பாடல் என அனைத்துமே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவரின் தோற்றமும் இன்னும் அன்னைக்குப் பார்த்தது போலவே இளமையாக இருப்பார்.

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இவருக்கு வில்லனாக விஜய் சேதுபதியும் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம்  தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நடிகர் விஜய் 2011 ஆம் ஆண்டு வேலாயுதம் திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு தங்கையாக நடிகை சரண்யா மேனன் நடித்து இருப்பார்.  அந்தத் திரைப்படத்தில் அவர் இறந்தது போல காட்சி இருக்கும் அந்த காட்சிக்கு விஜய் அவர்கள் உண்மையாகவே தேம்பித் தேம்பி அழுதுள்ளார்.

அந்த ஷூட்டிங்கின்போது அவருக்கு அவரது இரண்டு வயது தங்கை உடல் நலக்குறைவால் இறந்துபோன ஞாபகம் வந்ததால் அழ ஆரம்பித்து விட்டார். இதனைப் பேட்டி ஒன்றில் வேலாயுதம் திரைப்படத்தில் அவரது தங்கையாக நடித்த லட்சுமி மேனனே கூறியுள்ளார்.

அதுபோல திருப்பாச்சி திரைப்படத்தில் நடிக்கும் போது தன்னுடைய தங்கச்சி உயிரோடு இருந்திருந்தால் இப்படி தான் அவளை பார்த்து இருப்போம் என நினைத்து அழுதாராம். இந்த இரண்டு படத்திலுமே அவர் ரொம்ப எமோஷனலாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.