பல கோடி மதிப்பில் சொகுசு காரை வாங்கிய தளபதி விஜய்.. ஆத்தாடி சகல வசதியும் இருக்கும் போல..

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் GOAT. மேலும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. லெஜெண்டுகளை கிரேட்டஸ்ட் ஆஃப் த ஆல் டைம் Goat என்று அழைப்பார்கள். வெங்கட் பிரபு என்றாலே படத்திற்கு வித்தியாசமான பெயர்தான் வைப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அந்தவகையில் இந்த திரைப்படத்திற்கு கோட் என பெயர் வைத்துள்ளார். இதுவே பெரிய அளவில் விஜய் ரசிகர்களால்  பேசப்பட்டது.

இந்த படத்திற்கான பூஜை சென்னையில் நடத்தப்பட்டு பாடல் ஷூட்டிங்  உடன் படம் ஆரம்பித்தது. பட ஆரம்பித்திலேயே செம மஜாவான பார்ட்டி சாங் ஓன்று  எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடலில் பிரபுதேவா, விஜய், டாப் ஸ்டார்  பிரசாந்த், அஜ்மல் போன்றோர்  ஆடியுள்ளனர்.

மேலும் இந்த திரைப்படத்தில்  லைலா, சினேகா, மைக் மோகன், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ், மீனாட்சி சௌதரி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள்  நடித்துள்ளனர். மேலும் இந்தப் பாடலை மதன் கார்த்தி எழுதியுள்ளதாகவும், அனிருத் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பாடலுக்கு ராஜசுந்தரம் கோரியோகிராப் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதெல்லாம் பிரபலங்கள் என்றாலே சொகுசு கார்களை வைத்திருப்பது சாதாரணமாகிவிட்டது. ஏனென்றால் சின்னத்திரை சீரியல் நடிகர், நடிகைகள் முதல் டிஜிட்டல் நடிகர்கள் வரை சாதாரணமாகவே சொகுசு கார்களை வைத்துள்ளனர்.

அந்த வகையில் பல பிரபலங்களும் சொகுசு சுக்கார்களை வைத்துள்ளனர்.தளபதி விஜய் ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ் போன்ற சொகுசு கார்களை வைத்துள்ள நிலையில் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளாராம். தற்போது இவர்  BMW i7×Drive 60 என்ற சொகுசு கார் ஒன்றை வாங்கி யுள்ளாராம். இந்த காரின்  மதிப்பு சுமார் 2.30 கோடி முதல் 2.50 கோடி வரை இருக்கும் என  பேசப்படுகிறது.

thalapathy vijay new car
thalapathy vijay new car