10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை கொடுத்த விஜய்.! அதை வாங்கிய நந்தினி முடிவால் ரசிகர்கள் ஆச்சரியம்.!

vijay cinema
vijay cinema

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கில் மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது இதில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கினார் விஜய்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற நந்தினிக்கு சான்றிதழ் உடன் வைர நெக்லஸை விஜய் வழங்கியுள்ளார் இது குறித்து பேசி உள்ள நந்தினி தளபதி விஜயை  சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் நெக்லஸ் கொடுத்ததை என்னால் மறக்கவே முடியாது எனவும் பேசி உள்ளார்.

என்னுடைய குடும்பம் மிகவும் எளிமையானது இதுவரைக்கும் நான் தங்கத்தால் கூட நெக்லஸ் போட்டதே கிடையாது அதற்கான வசதியும் இல்லை விஜய் நடித்தது எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் மெர்சல் தான் நிஜத்திலும் அவர் ஹீரோ தான் என விஜயை புகழ்ந்து பேசினார்.

மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பல கோடி செலவு செய்து இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் விஜய் இந்த வைர நெக்லஸை கடைசி வரை நான் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருப்பேன் என 600 க்கு 600 எடுத்த நந்தினி பேசியுள்ளார்.

மேலும் தற்பொழுது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் விரைவில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது அது மட்டும் இல்லாமல் விரைவில் படத்தையும் வெளியிட இருக்கிறார்கள் பட குழு.