thalapathy 68 storyline : தளபதி 68 கதை இணையதளத்தில் லீக்.? அட இந்த கதை விஜய்க்கு செட் ஆகுமா.?

thalapathy vijay 68 storyline : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு அவர்கள் தான் இயக்குகிறார். மேலும் தளபதி 68 திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, விடிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ்,  என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க இருக்கிறார்கள் ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு தொடங்கி விட்டார்கள்.

கடுப்பில் எழுதிய கதை தான் என் வாழ்க்கையையே புரட்டி போட்டது.! பேரரசுக்கு நடந்த தரமான சம்பவம்..

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது மேலும் இந்த திரைப்படம் ஒரு டைம் டிராவல் திரைப்படம் என தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் இந்த திரைப்படத்தில் 25 வயது மதிக்கத்தக்க நபராகவும் 50 வயது மதிக்கத்தக்க நபராகவும் நடிக்க இருக்கிறாராம். டைம் ட்ராவல் கதை என்பதால் காலம் கடந்து செல்லும் பொழுது இளமையான விஜய் தோன்றுவதற்காக ஏ ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

அதற்காக தான் ஸ்கேனிங் ப்ராசஸ் செய்வதற்காக விஜய் அமெரிக்கா சென்று இருந்தார் இந்த நிலையில் மீண்டும் சென்னை திரும்பி தற்பொழுது படபிடிப்பை தொடங்கி விட்டார்கள். இளமையான விஜய் தோற்றத்தில் இருக்கும் பாடல் தான் முதலில் முதலில் படமாக்கப்பட்டது. ஏற்கனவே வெங்கட் பிரபு இது மாதிரி கதையில் வெற்றி பெற்றதால் மீண்டும் அதனை கையில் எடுத்துள்ளார்.

ஜோவிகாவை பணக்காரி என்று கூறிய பிரதீப்பை விளாசிய வனிதா விஜயகுமார்.. இது எல்லாம் பெரிய உருட்டால இருக்கு

டைம் லூப் முறையில் மாநாடு திரைப்படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு அந்த திரைப்படம் வெற்றி பெற்றதால் தற்போது டைம் ட்ராவல் மையமாக வைத்து தளபதி விஜய் வைத்து இந்த கதையை உருவாக்கியுள்ளாராம். டைம் டிராவல் கதை என்பதால் பலமுறை பல திரைப்படங்களை நாம் பார்த்து விட்டோம் கடைசியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கூட அதனைப் பார்த்து விட்டோம் அதனால் இந்த திரைப்படம் விஜய்க்கு செட் ஆகுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.