ரசிகர்களை சோதித்த தளபதி விஜய்யின் 6 திரைப்படங்கள்.! இதோ லிஸ்ட்

0

thalapathy vijay 6 flap movies list viral: ஆரம்ப காலத்தில் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் கால் பதித்த தளபதி விஜய் பல தோல்விகளை சந்தித்து முதல் நான்கு படங்கள் படுதோல்வி அடைந்து சினிமா துறை அவரை அவமானப் படுத்தியது இருப்பினும் விடா முயற்சியின் காரணமாக பூவே உனக்காக என்ற திரைப்படத்தின் மூலம் தனது முதல் வெற்றியை பதித்து தமிழ் திரையுலகில் “இளைய தளபதி” என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே மக்களின் மனதை கவர்ந்து இழுத்தது.
இருந்த பொழுதிலும் விஜய் நடித்த ஒரு சில படங்கள் மக்களிடையே முகம் சுளிக்க வைத்தது அந்த ஆறு படங்கள் விஜய்யின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது.

அந்த பட வரிசையில் அழகிய தமிழ் மகன், குருவி, சுறா, வில்லு மற்றும் காவலன் போன்ற படங்கள் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் விஜய்யின் படத்தை இனியும் தியேட்டர்களில் ரிலீஸ் பண்ண மாட்டோம் என்று பகிரங்கமாக தகவலை வெளியிட்டனர்.

இருப்பினும் அதையெல்லாம் கடந்து இன்று பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முதல் இடத்தைப் பெற்று, இன்று வசூல் மன்னன் என்று திரையரங்கு உரிமையாளர்களை இனி விஜய் படத்தை மட்டுமே தியேட்டர்களில் வெளியிடுவோம் என்று கூற வைத்தார். இதற்கு காரணம் அவர் ஒவ்வொரு முறையும் படத்தின் கதை மற்றும் சமூக ரீதியாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.