சர்கார் படத்துக்கு பிறகு அரசியல் பேசும் தளபதி 68.? டைட்டில் இதுவா..

தமிழ் சினிமாவில் இன்று வசூல் சக்கரவர்த்தியாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த சில படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த  பொழுதிலும் வசூல் ரீதியாக 200 கோடிக்கு மேல அள்ளி வெற்றி பெற்றன.

இருந்தாலும் விஜய் மார்க்கெட்டுக்கு இது ஒரு பெரிய அடியாக பார்க்கப்பட்டது இதனால் அடுத்த படத்தில் எல்லாத்தையும் திருத்திக்கொள்ள லோகேஷ் உடன் கைகோர்த்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது.

படத்தின் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இறுதி கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடக்கும் எனது தகவல்கள் தெரிவிக்கின்றன படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த், த்ரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

லியோ படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜய் கைகோர்க்க இருக்கிறார் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா, கீர்த்தி செட்டி போன்றவர்கள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது மேலும் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்வார் என சொல்லப்படுகிறது. இந்த படம் குறித்து விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு டைட்டில் அப்டேட் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

படம் முழுக்க முழுக்க அரசியல் களத்தில் உருவாகும் என்றும் இந்த படத்திற்கு ஆங்கில பெயர் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது அதன்படி கேம், சிக்ஸர், ரி யூனியன், பொலிடிக்ஸ், ஹேங்க் ஓவர் போன்ற ஆங்கில டைட்டில் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது பொருத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..

Leave a Comment