திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்த தளபதி பட தயாரிப்பாளர்..! அதிர்ச்சியில் ஆடி போன சினிமா பிரபலங்கள்..!

தமிழ் சினிமாவில் பல்வேறு முக்கிய திரைப்படங்களை தயாரித்து சிறந்த தயாரிப்பு நிறுவனமாக வலம் வந்த தயாரிப்பு நிறுவனம் தான் லட்சுமி மூவி மேக்கர் தயாரிப்பு நிறுவனம் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை, சிலம்பாட்டம் போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை தயாரித்துள்ளார்கள்.

மேலும் இந்த தயாரிப்பை நிறுவனம் மிகப் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும் இதில் மூன்று பேர் பங்குதாரராக இருந்துள்ளார்கள் அந்த வகையில் தற்பொழுது இதில் ஒரு பங்குதாரராக இருந்து வந்த முரளிதரன் என்பவர் தற்பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது தயாரிப்பாளருக்கு தற்பொழுது வயது பெறும் 66 மட்டுமே ஆகிறது என்னதான் இவருக்கு வயது முதிர்ந்தாலும் இவர் இருந்த காலகட்டத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் கமல் பிரபு விஜய் அஜித் சூர்யா என அனைத்து தமிழ் நடிகர்களுடனும் இவர் பணியாற்றியுள்ளார் அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அதுமட்டுமில்லாமல் சூரியாவின் மெகாஹிட் திரைப்படமாக அமைந்த உன்னை நினைத்து மற்றும் விஜய் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த பிரியமுடன் திரைப்படத்தை தயாரித்தது மட்டுமில்லாமல் பகவதி திரைப்படத்தையும் நமது தயாரிப்பாளர் முரளிதரன் அவர்கள் தான் தயாரித்து உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது தயாரிப்பாளர் திடீரென மறைந்தது திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதனால் சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமாத்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரபலங்களும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

muralitharan
muralitharan

Leave a Comment