தளபதி பிறந்தநாளில் அடிச்சி தூக்கும் தல ரசிகர்கள்.! கெத்து காட்டுகிறார்களே

தமிழ் சினிமாவில் எதிரும் புதிருமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று கருதினாள் அஜித் விஜய் என்று பிறந்த குழந்தை கூட சொல்லும் அந்த அளவு அஜித், விஜய்யை சினிமாவில் எதிரும் புதிருமாக காட்டி வருகிறார்கள் ஆனால் இவர்கள் இருவரும் உண்மையில் நல்ல நண்பர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் ரசிகர்களோ அடிக்கடி சமூகவலைதளத்தில் போட்டி போட்டுக் கொள்வார்கள் அதுமட்டுமில்லாமல் யார் திரைப்படம் வெளியானாலும் அன்று திரையரங்கமே திருவிழா போல் மாறி மாறி கொண்டாடுவார்கள். அந்தவகையில் தளபதி விஜய் தன்னுடைய 47 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் கொரோனா காலகட்டம் என்பதால் விஜய் ரசிகர்கள் கட்டவுட், பாலாபிஷேகம், ஆட்டம், பாட்டம் மாலை, தோரணம் என பெரிதாக கொண்டாடவில்லை என்றாலும்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காமன் டிபி வெளியீட்டு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள். இந்த நிலையில் அதிகாலையில் இருந்து விதவிதமான பிறந்தநாள் சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தளபதி ரசிகர்களை உச்சக்கட்ட சந்தோசத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நேற்று மாலை 6 மணிக்கு தளபதி 65 ஆவது திரைப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள். சன் பிக்சர் நிறுவனம்.

அதுமட்டுமில்லாமல் இரண்டாவது போஸ்டரை அதிகாலை 12 மணிக்கு வெளியிட்டு  ரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைத்தார்கள். மேலும் இந்த போஸ்டர்கள் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டுமில்லாமல் இதுகுறித்த ஹாஸ் டேக்கும் சமூகவலைதளத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதே போல் மே 1 அஜித் பிறந்த நாளன்று வலிமை திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் கொரோனா காலகட்டம் என்பதால் அப்டேட் வெளியீட படக்குழு முன்வரவில்லை.

இந்த நிலையில் விரைவில் வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தளபதி விஜய் ரசிகர்களின் ட்ரெண்டிங் டேக்கிற்கு எதிராக தளபதி ரசிகர்கள் தல ஹாஸ்டேக்கை ஒன்றை ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.

Leave a Comment