தளபதி பிகில் பட வசூலுக்கு செக் வைக்கும் விஜயின் அடுத்த பட இயக்குனர்.!

0
vijay bigil
vijay bigil

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் நடித்து வரும் பிகில் திரைப்படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது இந்த திரைப் படத்தில் விஜய்யுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ளார், மேலும் யோகிபாபு, ஜாக்கி ஷராப், கதிர், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

மேலும் படத்தில் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன, அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான சிங்கப் பெண்ணே பாடல் யூடியூபில் பல சாதனைகளை செய்தது.

மேலும் சமீபத்தில் தளபதி 64 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தார்கள் அதனால் விஜய் ரசிகர்களுக்கு டபுள் மகிழ்ச்சிதான் ஏனென்றால் விஜய் இந்த திரைப்படத்தில் கேங்ஸ்டார் ரோலில் நடிக்க இருக்கிறார், படத்தை  மாநகர பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க இருக்கிறார்.

பிகில் திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடித்த கைதி திரைப்படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது, விஜயின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜின் கைதி திரைப்படம் பிகில் படத்துடன் மோதுவதால் படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இப்படி பிகில் திரைப்படமும் லோகேஷ் கனகராஜ் திரைப்படமும் மோத இருப்பதால் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.