மீண்டும் தளபதி விஜய் உடன் வரலட்சுமி சரத்குமார்.! ஒருவேளை படத்தில் நடிக்கப் போறாரோ வெளியான புகைப்படம்

தமிழ் சினிமாவில் நடிகையாக நடித்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார் இவர் சரத்குமார் சாயாவின் மகளவார் என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் முன்னணி நடிகைக்காண வாய்ப்பை இதுவரை பெற முடியவில்லை. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பொதுவாக பல நடிகைகள் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அதனை ஏற்று நடிப்பார்கள் ஆனால்  வரலட்சுமி சரத்குமார் அப்படி கிடையாது எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை குணச்சித்திர வேடமாக இருந்தாலும் பரவாயில்லை வில்லி வேடம் ஆக இருந்தாலும் பரவாயில்லை என ஏற்று நடித்து வருகிறார்.

வரலட்சுமி சரத்குமார் முதன்முதலாக சிம்புவின் போடா போடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அதுமட்டுமில்லாமல் இவர் மதகஜராஜா தாரை தப்பட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர் மனதில் நீங்க இடத்தை பிடித்தால் இதில் தாரை தப்பட்டை திரைப்படத்தில் சசிகுமாருடன் நாட்டிய பெண்மணியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் கவர்ச்சி புயலை வீசி ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரமிக்க வைத்தார்.

இதனை தொடர்ந்து  வரலட்சுமி சரத்குமார்  விக்ரம் வேதா, மிஸ்டர் சந்திர மௌலி என பல திரைப்படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் வில்லியாகவும் சண்டைக்கோழி இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தார். தளபதி விஜய் உடன் சர்க்கார் திரைப்படத்திலும் வில்லியாக நடித்து ரசிகர்களை மிரட்டினார்.  இப்படி தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.

சர்க்கார் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த பிறகு வரலட்சுமி சரத்குமார் அவர்களுக்கு அதிகமாக வில்லி கதாபாத்திரமே அமைந்து வருகிறது அந்த வகையில் மாறி இரண்டாவது பாகத்திலும் வரலட்சுமி சரத்குமார் விசாரணை அதிகாரியாக நடித்திருந்தார் மேலும் சமந்தாவின் யசோதா, பாம்பன் பிறந்தால் பராசக்தி வண்ணங்கள் என பாலா திரைப்படங்களில் நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் கன்னடம் தெலுங்கு ஆகிய திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

vijay
vijay

முன்னணி நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணாவின் 107வது திரைப்படத்திலும் நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்து வருகிறார் தற்பொழுது வரலட்சுமி சரத்குமார் பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக உடலை குறைத்து தனது உடலை முறுக்கு ஏற்றி வருகிறார் அந்த வகையில் வரலட்சுமி சரத்குமார் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

vijay
vijay

சமீப காலமாய் instagram பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அட்டாக் செய்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார் இந்த நிலையில் விஜயுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அதாவது வரலட்சுமி சரத்குமார் விமானத்தில் தளபதி விஜய் சந்தித்துள்ளார் அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரளாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் விஜயின் திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கப் போகிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

vijay
vijay

Leave a Comment