300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் தளபதி 68..? இயக்குனரை லாக் செய்த விஜய்..! யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்பொழுது தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக இணைந்து தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக  ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஜெயசுதா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தை வெற்றிகரமாக தளபதி விஜய் முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் உடன் மீண்டும் ஒருமுறை கை கோர்த்து தனது 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் தற்போது அந்த படத்திற்கான கதையில் தான் தீவிரம் காட்டி வருகிறார். அதேசமயம் தளபதி 67 படத்திற்கு நடிகர் நடிகைகளையும் தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பகம் தளபதி 68 வது படத்தை யார் இயக்குவார் என்பது மிகப் பெரிய ஒரு கேள்விக்குறியாக இருந்து வந்தது.

ஏனென்றால் தளபதி 68 படத்தை முதலில் வெங்கட் பிரபு இயக்கு இருப்பதாக கூறப்பட்டது. இவரைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் கூட விஜய்க்கு ஒரு கதையை சொல்லி இருப்பதாக பேட்டியில் கூறினார் அதனால் யார் தளபதி 68 படத்தை இயக்குவார் என்பது கேள்விக்குறியாகவே இருந்தன. இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் அட்லீ தளபதி 68 படத்தை இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த படத்தை தேனாண்டால் ஃபிலிம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது அதேசமயம் தளபதி 68 படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் என கூறப்படுகிறது மேலும் பான் இந்திய திரைப்படமாக தான் அது உருவாக இருப்பதாகவும் ஒரு பக்கம் தகவல்கள் வெளி வருகின்றன ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..

Leave a Comment