Vijay 68 Main Villan : தளபதி விஜயின் வெற்றி இயக்குனர்களுடன் கைகோர்ப்பது வழக்கம் அந்த வகையில் விக்ரம் படத்தை எடுத்து வெற்றியை கண்ட லோகேஷ் உடன் கைகோர்த்து லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான்..
கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், திரிஷா, பிரியா ஆனந்த், பிக் பாஸ் ஜனனி என மிகப் பெரிய ஒரு திரை பட்டாளமே நடித்துள்ளது இந்த படத்தை ரசிகர்களையும் தாண்டி மக்கள் அதிகமாக எதிர்பார்த்து உள்ளனர். வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி லியோ கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. லியோ படத்தை முடித்த கையோடு வெங்கட் பிரபுவுடன் விஜய் கைகோர்த்து உள்ளார்.
இவர்கள் கூட்டணியில் தளபதி 68 உருவாகியுள்ளது மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது அண்மையில் இந்த படத்திற்காக வெங்கட் பிரபு விஜய் மற்றும் தயாரிப்பாளர் மூவரும் அமெரிக்கா என்ற புதிய தொழில்நுட்பத்தை பார்த்து வந்தனர் வரும் போது மும்பையில் நடிகர் சூர்யாவை சந்தித்து வெங்கட் பிரபு புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப் பார்த்த பலரும் தளபதி 68 இல் விஜய்க்கு வில்லன் சூர்யாவா என பலரும் கேள்விகளுக்கு எழுப்பி வந்தனர் இந்த நிலையில் அவர் கிடையாது தளபதி 68 படத்தில் இவர்தான் வில்லனாக நடிக்கப் போவதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல பாலிவுட்டில் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கும் அமீர்கான் தான்..

தளபதி 68 படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது நடைக்கும் பட்சத்தில் தளபதி 68 இந்தியாவையே திரும்பி பார்க்க வைப்பதோடு மட்டுமல்லாமல் 1000 கோடிக்கு மேல வசூல் அள்ளும் என பலரும் அடித்து கூறுகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.