தளபதி விஜய் முதல் இடத்தை பிடிக்க போட்ட நாடகம்.? தளபதி 68 – ல் சம்பளம் இவ்வளவுதான்..

தமிழ் சினிமா உலகில் பல டாப் நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால் அனைவரும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கிறார்களா என்றால் இல்லை ஆனால் சமீப காலமாக விஜய் நடிக்கும் படங்கள் சுமாராக இருந்தாலும் அந்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன. இதனால் அவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

கடைசியாக கூட இவர் நடித்த வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதாம். அதனைத் தொடர்ந்து லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லி யோ படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜயின் சம்பளமும் உயரும் என கணிக்கப்பட்டது அதன்படி விஜயின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும் அந்த படத்திற்காக விஜய் 200 கோடி சம்பளம் வாங்க உள்ளார் என்று தகவல்கள் கசிந்தன.. அப்படி என்றால்  தென்னிந்திய சினிமா உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெயரையும் விஜய் பெற இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் பெரிய அளவில் வைரலான நிலையில் ஒரு உண்மை தகவல் கிடைத்துள்ளது  அதாவது விஜய்க்கு 200 கோடி சம்பளம் என்று சொன்னால் அஜித், ரஜினிக்கு முன்னணி நடிகர் போட்டி போடமாட்டர்கள் என நினைத்தார்களாம்.

ஆனால் உண்மையில் இயக்குனர் வெங்கட் பிரபு – நடிகர் விஜய் இணையும் படத்திற்கு தளபதி விஜய் உடைய சம்பளம் சுமார் 115 கோடி இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் இதுவும் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Leave a Comment