விஜய்க்கு 200 கோடி சம்பளம்..! அவரை வச்சி எடுக்கும் வெங்கட் பிரபுவுக்கு இவ்வளவு தானா.? ஷாக்கான ரசிகர்கள்

தளபதி விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. லியோ படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக்   திரைப்படமாக உருவாகி வருகிறதாம்..

அதற்கு ஏற்றார் போல படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், திரிஷா மற்றும் பல முன்னணி நடிகைகள், நடிகர் நடித்து வருகின்றனர். இதை வெற்றிகரமாக முடிந்து விட்டு நடிகர் விஜய் அடுத்ததாக அஜித் பட இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்து நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் அரசியல் சம்பந்தமான ஒரு படமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 68 படத்தில் விஜயின் சம்பளம் குறித்தும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது விஜயின் சம்பளம் இதுவரை 100 கோடிக்கு மேல் இருந்து வந்த நிலையில் இந்த படத்தில் அவருடைய சம்பளம் சுமார் 200 கோடி என கூறப்படுகிறது.

விஜய்க்கு சம்பளம் 200 கோடி என்றால் விஜய் வைத்து படம் பண்ணும் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு அதிக சம்பளம் இருக்கும் என கூறப்பட்டது அதன்படி 20% சம்பளம் வெங்கட் பிரபுக்கு கிடைக்கும் என பலரும் கூறி வந்த நிலையில் தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபுவின் சம்பளம் சுமார் 10 கோடி என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீவு போல பரவி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment