Thalapathy 68 : பிள்ளையார் சுழி போட்டு பூஜையை தொடங்கிய வெங்கட் பிரபு.? வைரலாகும் புகைப்படங்கள்.

Thalapathy 68 : தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது லொகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது ஏனென்றால் இந்த மாதம் 19ஆம் தேதி படம் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.

மேலும் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் ஏற்கனவே லோகேஷ் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது அதனால் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் லியோ திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்யும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் அவர்கள் தளபதி 68 திரைப்படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது இந்த நிலையில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

மேலும் தளபதி 68 திரைப்படத்தின் பூஜை சென்னையில் பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற்றுள்ளது இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர்கள் பலரும் பங்கேற்றுள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் லியோ திரைப்படத்தை போலவே இந்த திரைப்படத்திற்கும் படக்குழுவினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தளபதி 68 திரைப்படத்தின் பூஜை புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Meenakshi Chaudhary
Meenakshi Chaudhary

நடிகை மீனாட்சி சவுத்ரி இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது அதுமட்டும் இல்லாமல்  மைக் மோகன் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார். நாளை படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது 16ஆம் தேதி வரை ஷூட்டிங் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அடுத்த கட்ட படபிடிப்பு வெளிநாட்டுகளில் நடைபெற இருப்பதாகவும் பட குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

thalapathy 68 poojai
thalapathy 68 poojai

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் யுவன் சங்கர் ராஜா விஜய் திரைப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் பாடல்கள் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த திரைப்படத்தில் சினேகா, பிரியங்கா மோகன் ஆகியோர்களும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது விரைவில் அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட இருக்கிறது படக்குழு.

thalapathy 68 latest update
thalapathy 68 latest update