தளபதி 68 -ல் இணையும் வில்லன்ங்களின் தலைவன்.? யார் அந்த நடிகர் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

Thalapathy 68
Thalapathy 68

Vengat prabhu meet Surya : தளபதி விஜய் லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படம் டைம் டிராவல் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் அண்மையில் படகுழு அமெரிக்கா சென்று ஒரு புதிய தொழில்நுட்பத்தை பார்த்து வந்துள்ளது மேலும் தளபதி விஜய், இயக்குனர்  வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் மூவரும் அங்கு திரையரங்கிற்கு சென்று பிரபல நடிகரின் படத்தை பார்த்தும் கொண்டாடினர் என்பது கூடுதல் தகவல்..

போன வேலையை முடித்துவிட்டு இந்தியா திரும்பியது அப்பொழுது மும்பையில் நடிகர் சூர்யாவை சந்தித்து வெங்கட் பிரபு புகைப்படம் எடுத்துக் கொண்டார் சூர்யா கங்குவா திரைப்படத்தின் தனது போர்ஷனை முடித்ததை தொடர்ந்து அவரும் வெளிநாட்டிற்கு சென்று இருந்தார். அதன் புகைப்படங்கள் கூட வெளிவந்த நிலையில் வெங்கட் பிரபு – சூர்யாவை..

முன்பையில் சந்தித்து எடுத்துக் கொண்ட அந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் எதார்த்தமான சந்திப்பா அல்லது தளபதி 68 திரைப்படத்தில் சூர்யாவும் நடிக்க உள்ளாரா என பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். விக்ரம் படத்தில் எப்படி சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தாரோ..

அதேபோல தளபதி 68 படத்திலும் இருக்க வாய்ப்பு இருக்கிறதா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஒரு சிலர் சும்மா இருந்த சங்கை வெங்கட் பிரபு ஊதிவிட்டார். இனி என்ன என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை எனக் கூறி கமெண்ட் எடுத்து வருகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..