தளபதி 67-ஐ செதுக்கும் லோகேஷ் கனகராஜ்.! கதை இதுதான்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் அவர்கள் நடித்துவரும் திரைப்படம் தளபதி 67. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கிறது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி வெளியாகிய நிலையில் இந்த படம் வெளியான பிறகு தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கூறியிருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் கேட்கும் போது இன்னும் பத்து நாட்களில் தளபதி 67 திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார். அது எதுவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக வெளியாகவில்லை என்று குறிப்பிடப்பட்டது.

அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் 50 வயது கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக திரிஷா அவர்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு மகளாக பிக் பாஸ் பிரபலம் ஜனனி அவர்கள் நடிக்கிறார் என்று ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது அதாவது தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு ரெஸ்டாரண்ட் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார் அப்போது வில்லன்களால் அவருடைய மகளுக்கு பெரும் பிரச்சனை ஏற்படுகிறது அதன் பிறகு அந்த வில்லன்களை எப்படி எதிர்கொண்டு அவர்களை எப்படி ஜெயிக்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று இணையத்தில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய்க்காக இந்த கதையில் சில பல மாற்றங்கள் செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படமாகவும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment