பூஜையுடன் தொடங்கிய தளபதி 67.! வெறிதனமான ஆட்டத்தை ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்…

லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், என சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது நடிகர் விஜய் வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். நடிகர் விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தை முடித்த விஜய் அவர்கள் தற்போது அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டார்.

ஏற்கனவே லோகேஷ் நாகராஜ் மற்றும் விஜய் கூட்டணிகளை உருவானான் மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தளபதி 67 உருவாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற இந்த பூஜையில் ஃபோன்கள் அனுமதி இல்லை ஆகையால் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம்தான் வெளியிடும் என தெரிகிறது.

மேலும் தளபதி 67 பட அறிவிப்பு டீசர் படபிடிப்பிற்காக பிரசாத் இரண்டு செட் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று ரெட் டோனில் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் நான்கு நாட்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் திரும்பவும் விஜய் வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்கு உள்ளார்.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா அவர்கள் நடிப்பார் என தகவல் வெளியாகியிருக்கிறது ஆனால் அதிகாரப்பூர் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் பூஜையுடன் தொடங்கப்பட்ட போட்டோக்களை தயாரிப்பு தரப்பில் இருந்து விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment