தளபதி 67 அப்டேட் இந்த தேதியில் தான் வெளியாகிறது.! எதிர்பார்ப்பில் ஏங்க வைத்த தகவல்…

இயக்குனர் வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்த நடிகர் விஜய் அவர்கள் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்க உள்ள நிலையில் தளபதி 67 திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எங்கு சென்றாலும் பத்திரிக்கையாளர்கள் தளபதி 67 குறித்த அப்டேட் கேட்காத நேரங்களே இல்லை அது மட்டுமல்லாமல் இதுவரைக்கும் தோல்வியை கண்டிடாத இயக்குனராக இருந்து வருவதாலும் இவர் இயக்கம் அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்ற வகையில் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜன் அடுத்த படத்தின் அப்டேட்டை கேட்டு உலா வருகிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் இன்னும் பத்து நாட்களில் அப்டேட் வெளியாகி விடும் என்று கூறிய லோகேஷ் கனகராஜ் இன்று வரையிலும் எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடாமல் இருந்து வருகிறார். அதன் பிறகு ஜனவரி 26 ஆம் தேதி தளபதி 67 திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகும் என்று சமுக வலைதளத்தில் சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஆனால் அதன் பிறகு ஜனவரி 1, 2, 3, இந்த தேதிக்குள் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று சில தகவல்கள் சினிமா வட்டாரத்தில் இருந்து பரவி வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க ரசிகர்கள் தளபதி 67 அப்டேட் ஒரு பிரமோ வீடியோவாக தான் வெளியாகும் என்றும் அந்த வீடியோ இப்படி தான் இருக்கும் என்று உதாரணத்திற்கு ஒரு வீடியோவை போட்டு இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் தளபதி 67 திரைப்படம் எல்சியு-வில் இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் படத்தை விட இந்த படத்தின் அப்டேட்டிற்காக தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில் தளபதி 67 அப்டேட் குறித்து ஒரு தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

அதாவது தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என்றும் அந்த அப்டேட் ஒரு ப்ரோமோ வீடியோவாகத்தான் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

Leave a Comment