மிரட்டலாக வெளியான தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.! உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்…

இதுவரைக்கும் ரசிகர்கள் மிகவும் அதிகமாக ஒரு திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள் என்றால் அது தளபதி 67 திரைப்படத்திற்காக தான். இந்த திரைப்படத்தின் அப்டேட்க்காகவே பல நாட்களாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள் அந்த வகையில் தற்போது தளபதி 67 திரைப்படம் குறித்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் தளபதி 67 திரைப்படத்திர்க்காகதான் பலரும் காத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் வாரிசு படம் வெளியான பிறகு தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் வெளியாகி விடும் என்று ரசிகர்களை சமாதானப்படுத்தி வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு கட்டத்திற்கு மேல் கண்ட்ரோல் மீறி போனதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு தளபதி 67 திரைப்படத்திலிருந்து பல தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தாலும் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் ரொம்ப நாட்களாக காத்திருந்த விஜய் ரசிகர்கள் ஆளுக்கு கால் விஜய் இப்படி தான் நடிக்கிறார் இந்த படத்தில் இவருடைய ஹேர் ஸ்டைலில் தான் நடிக்கிறார் படம் இப்படி தான் இருக்கும் என்று ஒவ்வொருவரும் புரளி கிளப்பி வந்தார்கள்.

இந்த நிலையில் ரசிகர்களால் துளியும் கூட எதிர்பார்க்காத விதமாக ஒரு அப்டேட்டை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்கிரின் ஸ்டுடியோ இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதாவது விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய உள்ளார் நடிகர் விஜய்.

இந்த திரைப்படத்தில்  விக்ரம் படத்தில் சண்டைக் காட்சியிள் பணியாற்றிய அன்பஅறிவு தான் தளபதி 67 திரைப்படத்திலும் பணியாற்ற இருக்கிறதாக கூறப்படுகிறது, மேலும் தினேஷ் மாஸ்டர் நடனம் அமைக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், இதேபோல லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ரத்தினகுமார் மற்றும் திராஜ் வைத்தி ஆகியோர் வசனம் எழுதியுள்ளதாகவும், தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட  கொஞ்சம் தகவல் வெளியான உடனே ரசிகர்கள் தற்போது மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து பிப்ரவரி 3ஆம் தேதி தளபதி 67 திரைப்படத்தின் ப்ரோமோ அப்டேட் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Comment