தளபதி 67 படம் இப்படித்தான் இருக்கும்.. முக்கிய ஹீரோ நடிப்பதை உறுதிப்படுத்திய லோகேஷ்..! வெளிவந்த புதிய அப்டேட்..

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகி உள்ள திரைப்படம் வாரிசு இந்த படத்தை தில் ராஜு மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்திருக்கிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இந்த படத்தை ஒரு குடும்ப செண்டிமெண்ட் கதையாக எடுத்திருக்கிறார்.

இருந்தாலும் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஏற்றபடி ஆக்சன், காமெடி, ரொமான்ஸ் என அனைத்தும் இருக்கும் என சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் வம்சியே கூறியதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் வாரிசு படத்தில் விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இணைந்து சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம் என மிகப் பெரிய ஒரு நட்சத்திரத்தை பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக இளம் இயக்குனர் லோகேஷ் உடன் கைகோர்த்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை கூட  அண்மையில் போடப்பட்டது.

வெகு விரைவிலேயே  சூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது ஆனால் இதில் யார் நடிக்கிறார்கள் என்பதை இதுவரை படக்குழு உறுதிப்படுத்தவில்லை இதனால் பல நடிகர்களின் பெயர்கள் வலம் வருகின்றன.. இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தளபதி 67 படம் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. இந்த படம் முழுக்க முழுக்க 100% என்னுடைய படமாக இருக்கும் என கூறினார் மேலும் பேசிய அவர் இந்த திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசு மேனன் நடிக்கிறார் என உறுதியாக சொல்லி உள்ளார் இந்த தகவல் தற்பொழுது வைரலாகி வருகிறது.

Leave a Comment