தளபதி 67 ஹீரோயின் இவரா.? லோகேஷ் கனகராஜ் மூலகாரர் தான் போல… யாரை செலக்ட் செய்துள்ளார் பார்த்தீர்களா.?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துடன் வளம் வருபவர் தளபதி விஜய். இவருடைய படம் திரைக்கு வருகிறது என்றாலே திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும் இந்த நிலையில் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மிகவும் பிரமாண்டமாக வெளியாகும் என தகவல் வெளியானது.

மேலும் வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இந்த நிலையில்  இந்த திரைப்படத்தின் அப்டேட்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தளபதி 67 திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அனைத்தும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது அதற்கு காரணம் தளபதி 67 திரைப்படத்தின் இயக்குனர் தான்.

தோல்வியை சந்திக்காத இயக்குனர் என்ற லிஸ்டில் இடம் பிடித்தவர் லோகேஷ் கனகராஜ் இவர் சமீபத்தில் இயக்கிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக  தளபதியின்  67வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் என கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் கமல் கெஸ்ட் ரோலில் நடிப்பார் எனவும் தகவல் கிடைத்தது. ஆனால் அவர் விக்ரம் திரைப்படத்தின் கதாபாத்திரமாக நடிப்பாரா அல்லது  விக்ரம் திரைப்படத்தில் சூர்யா நடித்தது போல்  ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்பது  இன்னும் தெரியவில்லை.

இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளில் மும்புறமாக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது  ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் ரத்னா குமாருடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படம் வெளியானது.

அதுமட்டுமில்லாமல் ஜில் ஜங் ஜக்  இயக்குனர் டி ராஜ் இனை எழுத்தாளராக தளபதி 67 திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் புகைப்படம் வெளியானது இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் ஹீரோயினாக திரிஷா இணை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது..

ஏற்கனவே திரிஷா மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடைய பேரும் புகழையும் பெற்றுவிட்டார் இந்த நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் திரிஷா நடிக்க போகிறார் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என லோகேஷ் கனகராஜ் பிளான் செய்துள்ளார்

விரைவில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக்கும். இதற்கு முன் த்ரிஷா விஜயுடன் இணைந்து ஆதி, குருவி,  கில்லி, திருப்பாச்சாமி, திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

trisha
trisha
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment