தளபதி 67 திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.! எத்தனை கோடி தெரியுமா.?

0
thalapathy-67
thalapathy-67

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னா நடித்திருப்பார் ஆனால் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து தற்போது தளபதி 67 திரைப்படத்தின் மூலம் மறுபடியும் இணைந்துள்ளதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரபூர்வ ஒரு அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் கூறி வருகிறார். தளபதி 67 திரைப்படத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன் சில தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், திரிஷா, மிஸ்கின், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் தளபதி 67 திரைப்படத்தில் ஒரு 50 வயது கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அவருக்கு மகளாக ஜனனி நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் இரண்டாவது கட்ட படபிடிப்பு கொடைக்கானலில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

முதல் 10 நாட்களில் விஜய் மற்றும் மிஸ்கின் ஆகிய இருவருக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாக தகவல் வெளியாகி இருக்கிறது அதன் பிறகு மற்ற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது அதாவது தளபதி 67 திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது அதாவது தளபதி 67 திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெரிய தொகை கொடுத்து வாங்கி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே வாரிசு படத்தின் உரிமையை சன் டிவி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து தற்போது தளபதி 67 திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.