தளபதி 67 படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா.? ரோலக்ஸ் போல அடுத்த பிராண்டை களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்..

0
thalapathy-67
thalapathy-67

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் விஜய் அவர்கள் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வரும் நிலையில் தளபதி 67 திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருக்கிறது.

இந்த நிலையில் ஒரு சில நாட்களாக தளபதி 67 குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு 50 வயது வில்லனாக நடிக்க இருக்கிறார் என்றும் அவருக்கு மகளாக பிக் பாஸ் பிரபலம் ஜனனி நடிக்கிறார் என்றும் பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் அவர்கள் நடிக்க இருந்தாராம் ஆனால் கால்ஷீட் காரணமாக அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று கூறப்படுகிறது இப்படி சில தகவல்கள் தளபதி 67 திரைப்படத்திலிருந்து வெளிவந்தாலும் ஆனால் அது எதுவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக வெளியாகவில்லை.

இந்த நிலையில் தளபதி 67 படத்தின் டைட்டில் இதுதான் என்று சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது தளபதி 67 திரைப்படத்திற்கு “ராய்ஸ்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது ஆனால் இது எதுவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ராய்ஸ் டைட்டிலை rolls-royce என்ற கார் கம்பெனியின் தழுவல் தான் ராய்ஸ் என்று கூறப்படுகிறது ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ரோலக்ஸ் என்ற வாட்ச் பிராண்டை சூர்யாவிற்கு வைத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் அதே யுத்தியை தளபதி 67 திரைப்படத்திலும் கையாண்டு உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் இந்த டைட்டில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. விரைவில் தளபதி 67 திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே வாரிசு படம் வெளியான பிறகு தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார். அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இடம் மறுபடியும் கேட்கும்போது இன்னும் பத்து நாட்களில் வெளியாகும் என்று கூறியிருந்தார்.

ஆனால் இன்று வரையிலும் தளபதி 67 குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் முதல் கட்டப்பட படபிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது. மேலும் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ மூலம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.