பிரம்மாண்ட தொகை கொடுத்து தளபதி 67 OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வாரிசு இந்த திரைப்படத்தை தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கியிருந்தார் மேலும் இதில் பல பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்ச்சனத்தை பெற்று வருகிறது.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் அவர்கள் இணைந்து தற்போது தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். வாரிசு திரைப்படம் தொடங்கியதிலிருந்து முடிவு வரைக்கும் வாரிசு திரைப்படத்தை விட தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டிற்காக தான் பலதரப்பு ரசிகர்கள் காத்திருந்தனர்.

அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. அதாவது தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார் யார் என்ற விவரத்தை தளபதி 67 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது.

அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஒரு மும்பை கேங்க்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் தளபதி 67 திரைப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் நாளை வெளியாக இருப்பதாக தற்போது படக்குழு அறிவித்து இருக்கிறது இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து தற்போது தளபதி 67 திரைப்படத்தின் ott உரிமையை கைப்பற்றிய நிறுவனம் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது இதனால் ரசிகர்கள் மீது எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். அதாவது தளபதி 67 திரைப்படத்தின் ott உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து netflix ott நிறுவனம் வாங்கியுள்ளதாக தற்போது பட குழு அறிவித்திருக்கிறது.

இதோ அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment