தளபதி 67 இல் சிறப்பான சம்பவம் இருக்கு.! லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் பிளான்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னா இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை வம்சி அவர்கள் இயக்கியுள்ளார்.

வாரிசு திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் நாகராஜ் உடன் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக ஆறு நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் அதில் சஞ்சய் தத், அர்ஜுன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரித்திவிராஜ், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க போவதாகவும் படத்தின் கதாநாயகி திரிஷா கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் மும்பை கேங்ஸ்டர் கதை தான் என கிசிசிக்கப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 67 திரைப்படமும் லோகேஷ் கனகராஜன் எல் சி யு அதாவது லோகேஷ் சினிமா டிக் யுனிவர்ஸ் ல் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் விக்ரம், கைதி, தளபதி 67, ஆகிய மூன்று படங்களும் ஒன்றிணை உள்ளதாக  தெரிகிறது.

மேலும் விக்ரம் திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் திரையரங்கத்தை அலறவிட்ட ரோலக்ஸ் கதாபாத்திரம் தளபதி 67 திரைப்படத்தில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த அறிவிப்பை பட குழுவினர் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களைப் பொறுத்தவரை தளபதி நடித்து வரும் வாரிசு திரைப்படத்தை விட  தளபதி 67 திரைப்படத்திற்காக தான் காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம் ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் இன் தரமான சம்பவங்கள் இந்த படத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டப் பணிகள் நடந்து வருவதாகவும் விரைவில் படம் முடிய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது அதுமட்டுமல்லாமல் வாரிசு திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version