தளபதி 67 : படம் குறித்து சூப்பரான செய்தியை ரசிகர்களுக்கு கொடுத்த ஜிவி பிரகாஷ்.! விஜயின் அந்த படத்தை இயக்க போது இவர் தானாம்.

0

தமிழ் சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசக்கூடிய பிரபலமாக இருந்து வருபவர்தான் தளபதிவிஜய் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி கொள்வதோடு மட்டுமல்லாமல் நல்ல வரவேற்பும் இருந்து வருவதால் சினிமாவில் தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளார்.

மேலும் இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதனை தொடர்ந்து நடிகர் விஜய் முதன்முதலாக தெலுங்கு சினிமா பக்கம் அடியெடுத்து வைக்க உள்ளார்.

விஜயின் 66 வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி என்பவர் இயக்கவுள்ளார். திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் ராஜூ என்பவர் தயாரிக்க உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் செய்தி ஒன்று விஜய் பற்றி வெளியாகி உள்ளது.

தமிழ்சினிமாவில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ். சமீபத்தில் ரசிகர்களுக்கு பதில் அளித்தார் அப்போது அவர் பேசியது விஜய் மற்றும் வெற்றிமாறன் திரைப்படம் குறித்து பேசினார் அதில் வெற்றிமாறன் விஜய் இருவரும் ஒன்றாக பணிபுரிய இருக்கின்றனர்.

அதற்கான நேரம் சரியாக அமையவில்லை அவர்கள் இருவரும் அடுத்த வருடத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கலாம் கண்டிப்பாக அப்படம் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமாக இருக்கும் என அவர் கூறினார்.  இதனால் தளபதி ரசிகர்கள் இப்போ ரொம்ப சந்தோஷத்தில் இருகின்றனர்.