அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் பறந்து செல்லும் தளபதி 67 பட குழு.! வெளியான வீடியோவை பார்த்து மெய்சிலிருந்து போன ரசிகர்கள்…

தற்போது சமூக வலைத்தளத்தில் எங்கு பார்த்தாலும் தளபதி 67 அப்டேட் தான் பறந்து கொண்டு இருக்கிறது அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்திற்காக பட குழுவினர் அனைவரும் தனி விமானத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் குறுகிய படங்கலை மட்டும் இயக்கி தற்போது முன்னணி நடிகர்களால் தேடப்படும் இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் நாலு படங்களை மட்டும் இயக்கி இருந்தாலும் அந்த நாலு படங்களும் தரமான சம்பவத்தை கொடுத்திருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இவர் கடைசியாக இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டது இதனால் தளபதி 67 திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் பலமுறை கேட்டு இருக்கிறார்கள் இந்த நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி கொண்டே இருக்கிறது.

அதாவது தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் புகைப்படத்துடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தளபதி 67 படத்தின் பட குழு. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் நேற்று பாதி அப்டேட்டை மட்டும் வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இன்று மீதி அப்டேட்டை வெளியிட இருப்பதாக கூறி இருக்கிறது.

இந்த நிலையில் இதுவரைக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் யார் யார் என்றால் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், திரிஷா, ஆகியோர் நடிக்கின்றனர் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு காஷ்மீர் செல்ல தயாராகி இருந்தார்கள் அது மட்டுமல்லாமல் அவர்கள் விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருப்பைதை நாம் பார்க்கலாம்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment