தளபதி 66 திரைப்படத்தில் ராஷ்மிகாவின் அப்பாவாக நடிக்கப்போவது இந்த முன்னணி நடிகராக.? இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

vijay 66 latest
vijay 66 latest

தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது ஏற்கனவே இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் தளபதி 66 திரைப்படம் ரசிகர்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் விஜய்.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படம் சமீபத்தில்தான் பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய்க்கு தந்தையாக சரத்குமார் சகோதரனாக ஷாம், ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஆகியோர்கள்   நடித்த வருகிறார்கள். இந்த நிலையில் தற்பொழுது தளபதி 66 திரைப்படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அதாவது இளைய திலகம் பிரபு இந்த  திரைப்படத்தில் புதிதாக இணைந்துள்ளார் இவர் அனேகமாக ராஷ்மிகா மந்தனா அப்பா கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

மேலும் தளபதி 66 திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது ஏனென்றால் இதற்கு முன் வெளியாகிய விஜயின்   திரைப்படங்கள் பொங்கல் தினத்தில் வெளியிட்டு  வெற்றி பெற்றுள்ளது என்பதால் இந்தத் திரைப்படத்தையும் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

thalapathy 66 update
thalapathy 66 update