தளபதியின் அடுத்த திரைப்படத்தை தட்டி தூக்கியிருக்கும் இளம் இயக்குனர்.! அய்யய்யோ வேண்டாம் என அலறும் ரசிகர்கள்.

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது இந்த பூஜையில் விஜய் கெத்தாக செம ஸ்மார்ட்டா கலந்து கொண்டார்.

அதேபோல் இந்த திரைப்படத்தின் கதாநாயகி பூஜையில் கலந்து கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தளபதி 66 திரைப்படத்தை இயக்குவதற்காக பல இயக்குனர்கள் போட்டி போடுகிறார்கள்.

இந்த நிலையில் தளபதி 66 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை அதுமட்டுமில்லாமல் தளபதி 65 திரைப்படம் எலக்சன்  முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay65
vijay65

அதற்குள்  66வது திரைப்படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் அவரின் ஆஸ்தான இயக்குனர் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அவர் வேறு யாரும் கிடையாது நம்ம அட்லி தான்.

இவர் தற்பொழுது ஷாருக்கான் திரைப்படத்தை முன்புறமாக இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி அடுத்த வருடம் சம்மரில் வேலையை முடிக்க இருக்கிறார்கள்.  அதற்குள் தளபதி 65 படத்தை முடித்துவிட வேண்டும் எனவும் திரைப்படம் முடிந்ததும் 66 படம் தொடங்கிவிடும் எனவும் அடுத்ததாக தளபதி 67 அட்லி உடன் அடுத்த திரைப்படத்தில் தளபதி இணைவார் என்று கூறப்படுகிறது.

மேலும் தளபதி 65 திரைப்படத்தை முடிப்பதற்குள் தளபதி 66 திரைப்படத்தின் பாதி வேலைகள் முடிந்தவுடன் தளபதி விஜய் தளபதி 67 திரைப்படத்தில் அட்லியுடன் இணைவார் என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Comment