தளபதி 65 திரைப்படத்திற்காக விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இணையாக.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய், அதேபோல் வசூலில் விஜயின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்து கொண்டே செல்கிறது, ரஜினிக்கு அடுத்து அதிக வசூல் செய்யும் நாயகனாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய பிகில் திரைப்படத்தின் மூலம் வசூல் மன்னனாக வலம் வருகிறார்.

இந்தநிலையில் தற்போது விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, அதேபோல் சமீபகாலமாக விஜய்யின் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கும்பொழுதே படத்தின் வியாபாரமும் நடந்து முடிந்ததை சமீபத்தில் நான் பார்க்க முடிகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது, அதுமட்டுமில்லாமல் சினிமா ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரிடமும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தளபதி 65 திரைப்படத்தைப் பற்றிய பேச்சுகள் அடிபட்டு வருகின்றன, மேலும் தளபதி 65 திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது, தளபதி 65 இத்திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க போகிறார் என்ற தகவல் சமீபத்தில் கிடைத்தன.

அதேபோல் தளபதி 65 திரைப்படத்தில் விஜய்யின் சம்பளம் சூப்பர்ஸ்டாருக்கு நிகரான சம்பளம் இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Leave a Comment