தளபதி 65 லீக்கான படத்தின் காட்சி.? அதிர்ச்சியாகும் படக்குழு.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்த வருபவர் தளபதி விஜய் இவர் வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானாலும் பல தோல்விகளையும் சில வெற்றிகளையும் சந்தித்து இதன் மூலம் பலவற்றை கற்றுக் கொண்டு தற்பொழுது சினிமாவில் தொடர்ந்து வெற்றித் படங்களை தந்து வருகிறார்.

அந்தவகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர்.  இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.  அந்த வகையில் இத்திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து காமெடி நடிகர் யோகிபாபு மற்றும் டிக் டாக் பிரபலம் அபர்ணா தாஸ் உள்ளிட்ட  இன்னும் பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது.சில தினங்களுக்கு முன்பு தான் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு முடிந்து விஜய் சென்னை வந்தார்.இந்நிலையில் ஜார்ஜியாவில் எப்படிப்பட்ட படப்பிடிப்புகள் பிடிக்கப்பட்டது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது  தீவிரவாதிகள் மற்றும் விஜய்க்கு இடையே மோதல் ஏற்ப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் மேலும் டூயட் சாங் ஒன்றும் படம் பாக்க பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலின் படி பார்த்தால் தளபதி 65 திரைப்படம் ஆக்ஷன்  காட்சியாக நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் தான் இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் இத்திரைப்படத்திற்கு முன்பு வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படம் காமெடி திரைப்படமாக இருந்தது.

Leave a Comment