தளபதி 65 – விஜய் ரசிகர்களுக்கு வீடியோ மூலம் இன்ப அதிர்ச்சி கொடுத்த சன் பிக்சர் நிறுவனம். இது அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து இருந்தார் அந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.  இந்த நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 65 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்த நிலையில்  பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சன் பிக்சர் நிறுவனம் சற்று முன்பு  வீடியோ மூலம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அந்த வீடியோவில் தளபதி 65 திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தார்கள் அதேபோல் மாலை 5 மணியை எண்ணி ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

5 மணிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அதிரடியாக அப்டேட்டை வெளியிட்டது அதாவது விஜயுடன் நடிப்பதற்கு நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள் அதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

இதோ அதன் வீடியோ.

Leave a Comment