போடு தகிட தகிட தளபதி 65 திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் யார் தெரியுமா.?

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மாஸ்டர் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் தளபதி 65 திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் இருக்கிறது.

தளபதி 65 திரைபடத்தை யார் இயக்கப் போகிறார். இசையமைப்பாளர் யார் என அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள் இந்த நிலையில் துரோகி இறுதி சுற்றுச் சூரரைபோற்று ஆகிய திரைப்படங்களை இயக்கிய சுதா கொங்கார என்ற பெண் இயக்குனர் இயக்க இருக்கிறார் என கூறுகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் தளபதி 65 திரைப்படத்திற்கு இசை அமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளன. ஜிவி பிரகாஷ் ஏற்கனவே தலைவா மற்றும் தெறி ஆகிய இரண்டு திரைப்படங்களில் விஜயுடன் பணியாற்றியுள்ளார். இந்தநிலையில் இந்த திரைப்படத்தின்  மூலம் விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர இருக்கிறார்.

மேலும் இவர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது இன்னும் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

Leave a Comment