விஜய் சேதுபதியின் ஆஸ்தான நாயகியுடன் ஜோடி சேரும் தளபதி விஜய்.! தளபதி-65 எக்ஸ்குளுசிவ் அப்டேட்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய், இவர் சமீப காலமாக தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி வருகிறது, சமீபகாலமாக விஜய் படம் என்றாலே வசூலில் பட்டையை கிளப்புகிறது அதனால் விஜய்யை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போடுகிறார்கள்.

அந்த வகையில் விஜய்யின் சினிமா பயணத்தில் மிக முக்கிய இயக்குனர் என்றால் ஏ ஆர் முருகதாஸ் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகிய துப்பாக்கி திரைப்படத்தை விஜய் கூட மறந்து விடலாம் ஆனால் விஜய் ரசிகர்கள் துளி கூட மறக்க மாட்டார்கள் அந்த அளவு இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

விஜயுடன் ஏ ஆர் முருகதாஸ் துப்பாக்கி திரைப்படத்தை தொடர்ந்து கத்தி திரைப்படத்திலும் சர்கார் திரைப்படத்திலும் இணைந்தார் ஆனால் கத்தி, சர்கார் திரைப்படம் துப்பாக்கி திரைப்படம் அளவிற்கு இல்லை என ரசிகர்கள் கொஞ்சம் வருத்தம் பட்டார்கள், இந்த நிலையில் தற்போது தளபதி 65 படத்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போடுகிறார்கள்.

அதேபோல் இயக்குனர்கள் லிஸ்டில் வந்தநிலையில் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யிடம் கதையை கூறியுள்ளார் அந்த கதை விஜய்க்கு பிடித்து விட்டதாகவும் உடனடியாக விஜய் வாய்ப்பு கொடுத்து விட்டார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன, அதேபோல் தளபதி 65 திரைப்படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக தான் இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

தளபதி 65 திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம்தான் தயாரிக்கிறது, இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார் என கூறுகிறார்கள், எனவே தளபதி 65 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் அல்லது பூஜா ஹெக்டே  ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்தது ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் சேதுபதியுடன் கவண், காதலும் கடந்து போகும் ஆகிய திரைப்படங்களில் நடித்த மடோனா செபஸ்டியன் கமிட் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இவர் விஜய்யுடன் நடிப்பது ரசிகர்கள் எந்த அளவு ஏற்றுக்கொள்வார்கள் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ஏனென்றால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே  ஆகியவர்களில் ஒருவர்தான்.

madona

Leave a Comment

Exit mobile version