பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் தளபதி 65.! இயக்குனர் யார் தெரியுமா.? அப்போ சுதா கொங்கரா என்னாச்சு.?

தளபதி விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன இதனை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடக்க இருக்கின்றன இந்த  நிலையில் தளபதி 65 திரைப்படத்தைப் பற்றிய தகவல் இணையதளத்தில் உலா வருகின்றன.

அதில் இயக்குனர் சுதா கொங்கரா விஜயை வைத்து இயக்க இருக்கிறார் என பரவலாக பேசப்பட்டது, ஆனாலும் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூட்டணி வைக்கிறார் எனவும் இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது எனவும் தகவல் வெளியாகியது.

ஆனால் இந்த எந்த தகவலும் உறுதிப்படுத்தாத நிலையில் இப்பொழுது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, இந்த நிலையில் தளபதி 65 திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக தயாராக உள்ளது. இந்த திரைப்படம் சுமார் 250 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த திரைப்படம் உருவாக இருக்கிறது என கூறுகிறார்கள், மேலும் தளபதி 65 திரைப்படத்தை முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இந்த திரைப்படத்தின் கதையை முருகதாஸ் ஏற்கனவே விஜய்யிடம் கூறி சம்மதம் வாங்கி விட்டார் எனவும் கூறுகிறார்கள்.

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவாகி ஹிட்டடித்த துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக தான் இந்த திரைப்படம் உருவாக இருக்கிறது விஜய்யின் சினிமா வரலாற்றில் முதன்முறையாக 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது இந்த திரைப்படம் தான், விஜய் 40 வயதைக் கடந்தாலும் இன்னும் இளமையாக தான் இருக்கிறார் அதனால் இந்த திரைப்படத்தில் இன்னும் இளமையுடன் நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

Leave a Comment