அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் கைதி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் கதை முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கிறது, குறைந்த பட்ஜெட்டில் குறைந்த காலத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது, மேலும் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் டெல்லி சென்றுள்ளார்கள். டெல்லி சென்றுள்ள விஜய் விமான நிலையத்தில் இருந்து இறங்கி செல்லும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன.
டெல்லியில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கின்றன இதில் விஜய் சேதுபதியும் கலந்து கொள்ள இருக்கிறார், படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கிறார் மேலும் ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கிறார்கள், எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார், அனிருத் திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார், இந்த திரைப்படத்திற்காக விஜய் தாடி மீசை என அனைத்தையும் மாற்றியுள்ளார்.
இந்த நிலையில் விஜய்யின் புதிய கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.
