திடீரென ரசிகர்களை சந்தித்த விஜய் எந்த லுக்கில் இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோ.

0

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் கர்நாடக சென்றுள்ளார்கள்.

தளபதி விஜய் கர்நாடகா போனதிலிருந்து அங்கு ரசிகர்களை அடிக்கடி விஜய் சந்தித்துள்ளார் அதன் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன இந்த நிலையில் பிரபல ஹோட்டலுக்கு விஜய் சென்றுள்ளார் அப்பொழுது ஹோட்டல் முன்பு விஜய் ரசிகர்கள் சூழ்ந்து உள்ளார்கள்.

தளபதி விஜய் படப்பிடிப்புக்கு செல்லும் பொழுதும் படப்பிடிப்பு முடிந்து வரும் பொழுதும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார், இன்றும் படப்பிடிப்புக்கு கிளம்புவதற்கு முன் விஜய் வெள்ளை சூட்டில் ஹோட்டலை விட்டு வெளியே வந்து ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு சென்றுள்ளார்.

அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ