தளபதி 64 டைட்டில் குறித்து அதிரடியாக டுவிட் செய்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.!

0
thalapathy 64
thalapathy 64

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் இவரை பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என அழைக்கலாம் ஏன் என்றால் சமீப காலமாக இவர் நடித்துவரும் திரைப் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் மீண்டும் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியிட  இருக்கிறார்கள், படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது, இந்த திரைப்படத்தில் இருந்து சிங்கப் பெண்ணே பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூப்பில் சாதனை படைத்தது, அதேபோல் நேற்று மாலை 6 மணிக்கு பிகில் படத்திலிருந்து வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆனது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் அறிவிப்பை சமீபத்தில்தான் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்கள் படக்குழு.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டிலை கேட்டு ரசிகர்கள் ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார்கள், இதற்கு படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார், இன்னும் தளபதி 64 டைட்டில் உறுதியாகவில்லை முதலில் பிகிலை  கொண்டாடுங்கள் எனக் கூறியுள்ளார்.

thalapathy 64
thalapathy 64