தளபதி 64 திரைப்படத்தின் வில்லன் இந்த முன்னணி நடிகரா.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்

Actor-Vijay
Actor-Vijay

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் புரமோஷன் வேலைகளில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

மேலும் பிகில் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தளபதி 64 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிட்டார்கள் படக்குழு.

இந்நிலையில் படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வைரலானது இந்த நிலையில் தளபதி 64 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறுகிறார்கள்..

இதற்கு விஜய்சேதுபதியும் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.