தளபதி 64 திரைப்படத்தில் வில்லன் இவரா இது மட்டும் நடந்தால் திரைப்படம் தாறுமாறு தான்.

0
thalapathy 64 news
thalapathy 64 news

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தை வருகிற தீபாவளிக்கு மிகவும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற 19ஆம் தேதி நடத்த இருக்கிறார்கள்.

இந்த நிலையில் விஜய் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார், விஜய்யின் 64 வது திரைப்படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார், இந்த திரைப்படத்தில் யூடியூபில் பிரபலமான சிலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய் சேதுபதி தான் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது, இந்தநிலையில் விஜய் சேதுபதியும் படத்தில் நடிப்பதற்காக யோசித்து வருவதாக தகவல் வெளியானது, அதுமட்டுமில்லாமல் தனது கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்யும் வேலையில் இருக்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை யான தகவல் என்று தெரியவில்லை ஆனால் தளபதி 64 திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தால் படம் தாறுமாறு தான் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

vijay sethupathi
vijay sethupathi