தளபதி 64 சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகருக்காக விஜய்சேதுபதி செய்த காரியம்.! வைரலாகும் வீடியோ

0

தளபதி விஜய் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மாநகரம் கைதி  திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார்.

மேலும் படத்தில் விஜய் ஒரு கல்லூரிப் பேராசிரியராக நடித்து வருவதாக சமீபத்தில் செய்தி வெளியாகியது, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முதல்கட்டமாக சென்னையிலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியிலும் நடைபெற்றது, இந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது, இந்த மூன்றாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது கட்ட படப்பிடிப்புக்காக தளபதி 64 படக்குழு கர்நாடகாவிற்கு சென்றுள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது அதேபோல் சமீபத்தில் விஜய் சேதுபதி படப்பிடிப்பில் பங்கேற்று உள்ளார்,. இதற்காக விஜய் சேதுபதி சிவமோகா வந்துள்ள தகவலை அறிந்த ரசிகர்கள், ஹோட்டல் முன்பு குவிய ஆரம்பித்தார்கள்.

அதிலும் விஜய் சேதுபதியின் ஒரு ரசிகருக்கு இன்று பிறந்தநாள் அதனால் தனக்கு பிறந்தநாள் கேக் ஊட்டி விட வேண்டுமென்று ஆசைப்பட்ட அந்த நபர் விஜய் சேதுபதியை காண கையில் கேக் உடன் வந்திருந்தார் இந்த செய்தியை கேள்விப்பட்ட விஜய் சேதுபதி அந்த ரசிகருக்கு கேக் ஊட்டி வாழ்த்து கூறியுள்ளார் அதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.