தளபதி 64 திரைப்படத்தில் விஜய் சேதுபதி.! எப்படி தெரியுமா?

0
thalapathy 64 news
thalapathy 64 news

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் 3வது முறையாக பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் சமீபத்தில்  நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவும் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 64 என பெயரிட்டுள்ளார்கள்.

விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘தளபதி 64’ படத்தில் விஜய் சேதுபதி இணைந்தது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ’தளபதி 64’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லிலித்குமார் தான் விஜய்சேதுபதி நடித்து வரும் ’துக்ளக் தர்பார்’ படத்தின் தயாரிப்பாளர் என்பதால் இப்படத்திற்காக விஜய் சேதுபதி வழங்கிய தேதிகளை மாற்றியமைக்க ஆலோசனை கூறியுள்ளார். அதனை ஏற்று கொண்ட விஜய் சேதுபதி, ‘தளபதி 64’ படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.