தளபதி 64 படத்தின் கதை பற்றி முதல் முறையாக இயக்குனர் சொன்ன தகவல்.! பிரமாண்டத்தின் உச்சம் தளபதி 64

0
Thalapathy-64
Thalapathy-64

இளைய தளபதி விஜய்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர் கூட்டம் இருக்கிறது, இவர் தெறி மெர்சல் போன்ற இரண்டு வெற்றி படங்களை கொடுத்த அட்லியின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், பிகில் படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

மேலும் பிகில் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த திரைப்படத்தை வருகின்ற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் பிகில் படத்தின் விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் அனைத்தும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள் மேலும் தளபதி 64 படத்தை எக்ஸ்பி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றுவார் மேலும் சத்தியன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

படத்திற்கு தற்காலிகமாக தளபதி 64 என டைட்டில் வைத்துள்ளார்கள் வருகின்ற அக்டோபர் மாதம் 4 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது, தளபதி 64 படத்தைப்பற்றி லோகேஷ் இடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது. பிகில் படம் திரையுலகிற்கு வருவதற்கு முன்னரே அடுத்த படம் பற்றி சமூக வலைதளங்களில் பரவியது, ஆனால் தளபதி 64 திரைப்படத்தின் கதை குறித்து எந்த தகவலும் நான் கூற மாட்டேன் என கண்டிஷனாக கூறியுள்ளார்.

முதலில் தளபதியின் பிகில் திரைப்படத்தை குடும்பத்துடன் கொண்டாடுங்கள், இப்பொழுதெல்லாம் நான் புது படத்தை பற்றி விரைவில் பேசி விடுகிறேன் என நகைச்சுவையாக கூறினார், ஆனால் கதை பற்றி எந்த தகவலையும் என்னால் கூற முடியாது, ஆனால் தளபதி 64 திரைப்படத்தில் இதுவரை திரை உலகில் விஜயை பார்க்காத அளவிற்கு இந்த திரைப்படத்தில் பார்ப்பீர்கள் தளபதி 64 படம் பிரமாண்டமாக இருக்கும் என கூறினார்.

இதனால் தளபதி 64 படம் பற்றி ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது மேலும் விஜய் ரசிகர்கள் தளபதி 64 என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் புதிய வெப்சைட் ஒன்றை உருவாக்கி ரசிகர்களின் கருத்து பற்றி பகிர்ந்து வருகிறார்கள்.