தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள், இது அனைவருக்கும் தெரிந்ததே, தற்பொழுது விஜய் தளபதி 63 திரைப்படமான பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் மேலும் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள், சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்கள் எப்பொழுதும் விஜயின் ஏதாவது ஒரு அப்டேட் வந்தால் அன்று முழுவதும் ட்ரெண்டிங்கில் வைப்பார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையதளங்களில் வைரலாகி மிகப்பெரிய ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.
இந்த நிலையில் தளபதி 64 படத்தின் படக்குழு 3 நாள்களுக்கு 3 அப்டேட் என அறிவித்திருந்தார்கள், இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள், அந்தவகையில் முதல் அப்டேட் விஜய் சேதுபதி தளபதி 64 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.
இந்த நிலையில் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
