பூஜையுடன் தொடங்கியது தளபதி 64.! வைரலாகும் புகைப்படம்.

0

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை வருகின்ற தீபாவளிக்கு மிகவும் பிரம்மாண்டமாக வெளியிட இருக்கிறார்கள், இதனைத் தொடர்ந்து மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 64 என பெயர் வைத்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகன் ஆகியோர்கள் நடிக்க இருக்கிறார்கள் என்பதை படக்குழு சமீபத்தில் உறுதி செய்தது அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது, இந்த திரைப்படம் திரில்லர் கதையில் உருவாக இருக்கிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை குறைந்த நாட்களில் முடித்து வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் #Thalapathy64Pooja என்ற ஹேர் ஸ்டைல் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகிறார்கள்.

Thalapathy-64
Thalapathy-64