தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் மிரட்டலான கெட்டப்பில் விஜய் சேதுபதி இணையதளத்தில் லீக் ஆன ஷூட்டிங் ஸ்பார்ட் வீடியோ

0
thalapathy64
thalapathy64

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம் வரும் நடிகர்களில் ஒருவர். இவர் பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மாநகரம் கைதி  திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துவருகிறார் அதுமட்டுமல்லாமல் விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ் வில்லனாகவும்  வில்லியாக ஆண்ட்ரியாவும் நடித்து வருகிறார்கள்.

ஏற்கனவே மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது இந்த நிலையில் தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பார்ட் வீடியோ ஒன்று இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது.

இந்த சூட்டிங் ஸ்பாட் வீடியோவில் விஜய் சேதுபதியின் கெட்டப் லீக் ஆகியுள்ளது, விஜய் சேதுபதியை ரசிகர்கள் சூழ்ந்து நிற்கிறார்கள். இதோ அதன் வீடியோ