தளபதி 64 – மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யின் பெயர் இதுதானா.? வைராலாகும் தகவல்

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 64 திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார், மேலும் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார், மாஸ்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆன நிலையில் படக்குழுவும் அப்டேட்களை கொடுத்து வந்தார்கள்.

சங்கத்தில் கூட ரமேஷ் திலக் நான் தளபதியுடன் நடித்து விட்டேன் என ட்வீட் செய்திருந்தார், இந்த நிலையில் படத்தில் விஜய்யின் பெயர் என்ன என்று  தற்போது வெளியாகியுள்ளது படத்தில் விஜய்க்கு ஜேம்ஸ் துரைராஜ் என்ற பெயர் வைத்துள்ளார்களாம்.

அதுமட்டுமில்லாமல் படத்தில் JD என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்படுவார் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் படக்குழு விரைவில் அறிவித்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.

Leave a Comment