கடந்த தீபாவளிக்கு ரசிகர்களின் விருந்தாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வெளியாகியது, இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய் கைதி திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டார் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது, அதுமட்டுமில்லாமல் குறைந்த பட்ஜெட்டில் குறுகிய காலத்திலேயே எடுக்க இருக்கிறார்கள் படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன் மாநகரம் கைதி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி 64 திரைப் படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடைபெற்று வருகிறது, விஜய் நேற்றுதான் டெல்லி சென்றிருந்தார் இந்த நிலையில் தாரை தப்பட்டை க்கு நடுவே விஜய் மாஸ் லுக்கில் நின்று கொண்டிருக்கிறார், இந்த புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படங்கள்.
