தளபதி 64 திரைப்படத்தில் விஜயுடன் நடிக்க இருக்கும் இரண்டு முக்கிய நடிகைகள்.!

0
Thalapathy-64
Thalapathy-64

நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிவடைந்தது அதனால் தற்போது டப்பிங் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் படக்குழுவினருக்கு தங்க நாணயம் வழங்கினார்.

மேலும் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியிடுவதற்கு படக்குழு அனைவரும் பரபரப்பாக பணியாற்றி வருகிறார்கள், இந்த நிலையில் அடுத்ததாக விஜய் மாநகரம் பட இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

லோகேஷ் திரைக்கதை அமைக்கும் பணியில் பிஸியாக இருக்கிறார், இந்த நிலையில் இந்த திரைப் படத்தில் விஜய்யுடன் நடிக்க இரண்டு நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மற்றும் ராஷிகன்னா ஆகியோர்கள் படத்தில் கமிட்டாகி உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.